செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (12:35 IST)

மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா பாதித்த நபர்: கொலை முயற்சி வழக்கு பதிவு

மருத்துவர் மீது எச்சில் துப்பிய கொரோனா பாதித்த நபர்
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போதிலும் ஒருசிலர் மருத்துவர்களுக்கும் காவல்துறையினருக்கும் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது
 
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட ஒருவர் வீட்டில் இருந்து வந்த பிரியாணியை சாப்பிட மருத்துவர்கள் அனுமதிக்காததால் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ரகளை ஏற்படுத்தியது குறித்த செய்தி ஏற்கனவே வெளிவந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் திடீரென மருத்துவர் மீது எச்சில் துப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
திருச்சியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவர் மருத்துவர்களுக்கு சரியான ஒத்துழைப்பு கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவருக்கு அறிவுரை கூறிய நிலையில் திடீரென அந்த நபர் மருத்துவர் மீது எச்சில் துப்பியதாகவும் முக கவசம் எடுத்து வீசியதாகவும் தெரிகிறது
 
இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் எச்சில் துப்பிய நபர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இரவும் பகலும் பாடுபட்டு வரும் மருத்துவர்கள் மீது கொரோனா பாதித்த நபர் ஒருவர் எச்சில் துப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது