செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (14:11 IST)

சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரிக்கு கொரோனா தொற்று: அதிர்ச்சி தகவல்

சுகாதாரத் துறையில் பணிபுரிந்து வரும் ஐஏஏச் அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பை உறுதி செய்யப்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை அடுத்து அவருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தானே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஏற்கனவே கடந்த வாரம் மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சுகாதாரத்துறை முதன்மை செயலாளருக்கும், அதற்கு முன்னர் ஒரு சில நாட்களுக்கு முன்னர் பொது சுகாதாரத்துறை சேவை நிர்வாக இயக்குனருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது சுகாதாரத்துறை ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது