வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஏப்ரல் 2019 (13:08 IST)

விலை குறைந்தது ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்: எவ்வளவு தெரியுமா?

ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் மீது அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ஆம், ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் மீது இச்சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரம் பின்வருமாறு...

 
அமேசான் ஃபேப் போன்ஸ் என்ற பெயரில் இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நாளை வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனின் விலை ரூ.37,999. 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,999.  
 
ஆனால், அமேசான் அஃபரில் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி உடனடி கேஷ்பேக் சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எச்டிஎப்சி வங்கி கார்டு. 
சலுகை போக 6 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போனை ரூ.34,999-க்கும், 8 ஜிபி ராம் மற்றும் 128 ஜிபி மெமரி ஸ்மார்ட்போனை ரூ.37,999-க்கும் வாங்க முடியும்.
 
ஒன்பிளஸ் 6டி சிறப்பம்சங்கள்:
# 6.41 இன்ச் 2340×1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 19.5:9 ஆப்டிக் AMOLED டிஸ்ப்ளே
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 6, ஆன்ட்ராய்டு 9.0 பை, ஆக்சிஜன் ஒ.எஸ். 9.0
# 2.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 10nm பிராசஸர், அட்ரினோ 630 GPU
# 6 ஜிபி / 8 ஜிபி ராம், 128 ஜிபி / 256 ஜிபி மெமரி
# 16 எம்பி பிரைமரி கேமரா, சோனி IMX519 சென்சார்
# 20 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, சோனி IMX376K சென்சார், F/1.7 அப்ரேச்சர்
# 16 எம்பி சோனி IMX371 செல்ஃபி கேமரா
# டூயல் சிம் ஸ்லாட், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி
# 3700 எம்.ஏ.ஹெச். பேட்டரி