செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 3 ஜூலை 2019 (14:08 IST)

ஒரேடியா விலை எகிறய பிஎஸ்என்எல் ரீசார்ஜ்: வாடிக்கையாளர்கள் அப்செட்!

பிஎஸ்என்எல் நெட்வொர்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த ப்ராட்பேண்ட் ரீசார்ஜ் திட்டங்களின் விலை மற்றும் சேவைகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு சந்தைக்குள் நுழைந்தது முதல் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றன. ஜியோவுக்கு போட்டியாக மற்ற நிறுவனங்கள் அனைத்தும் குறைந்த விலையில் சலுகைகளை வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை அதிகரித்துள்ளது. 
 
மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள பிஎஸ்என்எல் ரீசார்ஜ் ப்ளான்: 
 
1. ரூ.299 ப்ளான் தற்போது ரூ.349 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 8Mbps வேகத்தில் தினமும் 2 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
2. ரூ.549 ப்ளான் தற்போது ரூ.599 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 10Mbps வேகத்தில் தினமும் 4 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
3. ரூ.675 ப்ளான், தற்போது ரூ.699 ஆக மாற்றப்பட்டுள்ளது. மற்றபடி இந்த ப்ளானில் எந்த மாற்றமும் இல்லை.
 
4. ரூ.845 ப்ளான், தற்போது ரூ.899 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 10Mbps வேகத்தில் தினமும் 12 ஜிபி டேட்டா கிடைக்கிறது.

 
5. ரூ.1,199 ப்ளான், தற்போது ரூ.1,299 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 10 Mbps வேகத்தில் தினமும் 22 ஜிபி டேட்டா பெற முடிகிறது.
 
6. ரூ.1,495 ப்ளான், தற்போது ரூ.1,599 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் Mbps வேகத்தில் தினமும் 25 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
7. ரூ.1,745 ப்ளான், தற்போது ரூ.1,849 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 16 Mbps வேகத்தில் தினமும் 30 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
8. ரூ.2,295 ப்ளான், தற்போது ரூ.2,349 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 24 Mbps வேகத்தில் தினமும் 35 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
9. ரூ.3,999 ப்ளான், தற்போது ரூ.4,499 ஆக மாற்றப்பட்டுள்ளது. இதில் 100 Mbps வேகத்தில் தினமும் 55 ஜிபி டேட்டா பெற முடியும்.
 
10. ரூ.777-க்கு வழங்கப்பட்ட ஃபைபர் பிளான், தற்போது ரூ.849 ஆக மாற்றப்பட்டுள்ளது.