செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 27 ஜூன் 2019 (14:36 IST)

கஜானா எம்டி ஆனாலும், ஆஃபருக்கு பஞ்சமில்லை: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!

கஜானா எம்டி ஆனாலும், ஆஃபருக்கு பஞ்சமில்லை: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
பிஎஸ்என்எல் நிறுவனம் கடு நிதி நெருக்கடிகளை சந்தித்து வந்தாலும் தங்களது வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதில் பஞ்சமில்லாமல் அவ்வப்போது சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
அந்த வகையில், தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு மூன்று சலுகைகளை வழங்கியுள்ளது. சலுகைகளில் பயனர்களுக்கு அதிகபட்சம் தினமும் 3 ஜி.பி. டேட்டா சுமார் 8Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. ரூ.349, ரூ.399 மற்றும் ரூ.499 விலையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 
கஜானா எம்டி ஆனாலும், ஆஃபருக்கு பஞ்சமில்லை: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!
ரூ.349 மற்றும் ரூ.399 பிராட்பேண்ட் சலுகைகளில் தினமும் 2 ஜிபி டேட்டா, ரூ.499 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகள் ஜூலை 1 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
டேட்டா மட்டுமின்றி வாடிக்கையாளர்களுக்கு நாடு முழுக்க பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் சேவை வழங்கப்படுகிறது. மற்ற நெட்வொர்க்களுக்கு அன்லிமிட்டெட் அழைப்புகள் இரவு 10.30 மணி முதல் காலை 6.00 மணி வரை வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.