தொடர்புடைய செய்திகள்
- கஜானா எம்டி ஆனாலும், ஆஃபருக்கு பஞ்சமில்லை: ஜியோவுக்கு டஃப் கொடுக்கும் பிஎஸ்என்எல்!!
- வெறும் 600 ரூபா... ஏர்டெல், வோடபோன் சோலியை முடித்த ஜியோ!!
- மேக்சிமம் 20 ஜிபி; மினிமம் 5 ஜிபி: ஏர்டெல் ஃப்ரீ டேட்டாவை பெறுவது எப்படி?
- லாபம் பாத்து 10 வருஷம் ஆச்சு... முடிவை நெருங்கிய பிஎஸ்என்எல்!
- இருக்குற பஞ்சத்துல இவங்க வேற – தண்ணீர் குழாயை உடைத்த ஏர்டெல் நிறுவனம் – கடுப்பான மக்கள்
பைசாவும் போச்சு; பயனரும் போயாச்சு: ஏர்டெல் பாடு இனி திண்டாட்டம்தான்!
டிராய் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் அதிக வாடிக்கையாளர்கல் இணைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, ஜியோ நெட்வொர்க்கில் கடந்த ஏப்ரல் மாத்தில் மட்டும் புதிதாக 80 லட்சத்து 82 ஆயிரம் புதிய வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனராம்.
இதனையடுத்து பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் 2 லட்சத்து 28 ஆயிரம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனராம். ஆக மொத்தம் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 11 கோடியே 59 லட்சமாகியுள்ளது.
ஆனால், ஏர்டெல் நெட்வொர்க் ஜியோ வந்ததில் இருந்தே கடும் சரிவினை சந்தித்து வருகிறது. பிஎஸ்என்எல் 3ஜி சேவையை வழங்கினாலும் அதன் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் பட்சத்தில், ஏர்டெல் 4ஜி சேவை வழங்கியும் பயனர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை, லாபமும் ஈட்டவில்லை.
ஏர்டெல்லும் புது பயனர்களை ஈர்க்கவும், ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைக்கவும் பல சலுகைகளை வழங்கியும், இதே நிலைதான் தொடர்கிறது.
அடுத்த கட்டுரையில்
