வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 18 மே 2018 (17:01 IST)

டாக்டர் பட்டம் வாங்கினார் ஜி.வி பிரகாஷ்!

நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி பிரகாஷ் தொடர்ந்து சமூக பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்ததற்காக, அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

 
 
வெயில் படத்தை பார்த்தவர்களுக்கு ஜிவி பிரகாஷின் இசையை நினைத்தால் இப்போதும் மெய் சிலிர்க்கும். இவரது இசையமைப்பில் வெளிவந்த அனைத்து பாடல்களும் ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது.
 
இவர் 2016ல் வெளிவந்த டார்லிங் படத்தின் மூலம் கதாநாயகனாக அவதாரம் எடுத்து த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தின் மூலம் ரசகிர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தார். இதைத்தொடர்ந்து அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து கொண்டிருக்கிறார், அதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம், காவிரி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களுக்கு சமூக வலைதளங்களின் மூலம் தனது குரலை கொடுத்து வருகிறார். மேலும், பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட நீதி உதவி செய்துள்ளார். 
 
இந்நிலையில், ஜி.வி பிரகாஷின் சமூக பணிகளை பாராட்டும் வகையில் செயிண்ட் ஆண்ட்ரூஸ் பலகழைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் கொடுத்து அவரை பெருமைபடுத்தியுள்ளது.