வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 17 மே 2018 (13:46 IST)

பாலியல் தொல்லை: ஜிம்னாஸ்டிக் வீராங்கணைகளுக்கு ரூ.3250 கோடி நஷ்ட ஈடு!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கவையே அதிர வைக்கும் அளவுக்கு ஜிம்னாஸ்டிக் அணியின் மருத்துவர் நடத்திய காம வேட்டை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 
 
அவருக்கு எதிராக 156 பெண்கள் சாட்சியளித்தது அந்நாட்டை உலுக்கியுள்ளது. அமெரிக்காவில் மிக்சிகன் பல்கலைக்கழகத்தில் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சி கழகத்தின் டாக்டராக லார்ரி நஸ்சார் பணிபுரிந்தார்.
 
இவர் ஜிம்னாஸ்டிக் பயிற்சிக்கு வந்த வீராங்கனைகளிடம் பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. அவரால் பாதிக்கப்பட்டதாக 332 பெண்கள் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
 
அவர் மீது கலிபோர்னியா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனை முடிவுக்கு கொண்டு வர மிக்சிகன் பல்கலைக்கழகம் விரும்பியது.
 
எனவே, டாக்டர் லார்ரியல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்டஈடு வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முன் வந்து, அதன்படி ரூ.3250 கோடியை நஷ்ட ஈடாக வழங்க முன்வந்துள்ளது.