வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: புதன், 16 மே 2018 (15:16 IST)

சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்!

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
சுமார் 45 கோடி ரூபாய்க்கு விலைபோன வைரம்:
ஐரோப்பியாவின் அரச குடும்பத்திடம் கடந்த 300 வருடங்களாக இருந்த அரிய வகை நீல வைரம், சுமார் 45 கோடி இந்திய ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது.
 
ஸ்பெயினின் அரசர் பிலிப்பை, இளவரசி எலிசபெத் ஃபர்னீஸ் 1715-ம் ஆண்டு திருமணம் செய்தபோது இந்த நீல வைரம் பரிசாக அளிக்கப்பட்டது.
 
தொடரும் காஸா சோகம்:
ஜெரூசலேத்தில் இஸ்ரேலுக்கான புதிய தூதரகத்தை அமெரிக்கா திறந்துள்ள நிலையில், காஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 58 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
பேசுவோம்.. ஆனால் சுதந்திரம் கிடையாது:
 
கேட்டலோனியா பிராந்திய அரசைத் தலைமை ஏற்க தேர்ந்தேடுக்கப்பட்ட, கேட்டலோனியா சுதந்திரத்தை ஆதரிக்கும் தலைவரான க்விம் டோர்ராவை சந்திக்கத் தயாராக உள்ளதாக ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் கூறியுள்ளார். ஆனால், கேட்டலோனியா சுதந்திரத்திற்கு அனுமதிக்க முடியாது என ரஜாய் அழுத்தமாகக் கூறியுள்ளார்.