1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (11:46 IST)

BSNL BONANZA!! நான்கு மாதங்களுக்கு இலவச சேவை!!

பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் தனது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் ஏப்ரல் 14 வரை இலவச சேவை வழங்குவதாக முன்னரே அறிவித்தது. தற்போது பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகை ஒன்றை வழங்கியுள்ளது. 
 
ஆம், BSNL BONANZA என அழைக்கப்படும் இந்த திட்டம் தற்போதுள்ள பிஎஸ்என்எல் பிராட்பேண்ட் பயனர்களுக்கும், புதிய பிராட்பேண்ட் பயனர்களுக்கும் பயனளிக்கும். இந்த திட்டத்தில் இலவச சந்தா ரீசார்ஜ் கட்டணத்திற்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
 
அதாவது, 12 மாத சந்தாவை எடுத்துக் கொள்ளும் பயனர்களுக்கு ஒரு மாத இலவச சேவை, 24 மாத நிலையான சந்தாவை எடுத்துக் கொண்டால்  மூன்று மாத கூடுதல் சேவை,  36 மாத சந்தா தேர்வு செய்தால் நான்கு மாத சேவை வழங்கப்படுகிறது.