புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (12:18 IST)

அடடே... காசும் போட்டு காலும் பேச சொல்லும் BSNL!!

அடடே... காசும் போட்டு காலும் பேச சொல்லும் BSNL!!
பிஎஸ்என்எல் நிறுவனம் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் ஏப்ரல் 20 வரை துண்டிக்கப்படாது என அறிவித்துள்ளது. 
 
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனம் மக்களுக்கு சிறப்பான சிரமம் இல்லாத சேவையை வழங்க நட்வடிக்கைகளை எடுத்து வருகிறது.
 
அந்த வகையில் கட்டணம் ஏதும் செலுத்தவில்லை என்றாலும் பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் சிம் சேவைகள் துண்டிக்கப்படாமல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை செயல்பாடில் இருக்கும் என அறிவித்துள்ளது. 
 
மேலும், ஏழை மக்கள் மற்றும் தேவையான சூழலில் இருப்பவர்கள் கணக்கில் 10 ரூபாய் சேர்க்கப்பட்டு அவர்கள் அழைப்பை மேற்கொள்ள வழிவகுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.