வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 மார்ச் 2020 (07:47 IST)

கொரோனா பாதிப்பு எதிரொலி: பி.எஸ்.என்.எல், ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு

பி.எஸ்.என்.எல், ஏர்டெல் அதிரடி சலுகை அறிவிப்பு
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக நாட்டில் உள்ள அனைவரும் வேலையின்றி வருமானமின்றி வீட்டில் கடந்த ஒரு வாரமாக முடங்கிக் கிடக்கின்றனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக வருமானம் இன்றி இருக்கும் மக்களுக்கு திடீர் சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது
 
இதன்படி ஏப்ரல் 14 வரை பிஎஸ்என்எல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்யாவிட்டாலும் அவர்களது சேவை துண்டிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இதனை அடுத்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
பிஎஸ்என்எல் இந்த சலுகையை அறிவித்த அடுத்த சில நிமிடங்களில் ஏர்டெல் நிறுவனமும் ஒரு அதிரடி சலுகையை அறிவித்தது. ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 10 கூடுதலாக ரீசார்ஜ் செய்து தரப்படும் என்றும் அவர்கள் இந்த பணத்தை பின்னர் கட்டிக்கொள்ளலாம்  என்றும் அறிவித்துள்ளது. எனவே ரீசார்ஜ் செய்யப்பட்டாலும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கும் சேவை துண்டிக்கப்படாது ன்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது
 
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை வைத்துள்ள ஜியோ நிறுவனம் இன்னும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இதுபோன்ற சலுகையை அறிவிக்கவில்லை என்றாலும் மிக விரைவில் பிஎஸ்என்எல் மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களும் அறிவித்ததை போன்ற அதிரடி சலுகை அறிவிப்பை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது