ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 பிப்ரவரி 2021 (12:37 IST)

BSNL வழங்கும் TRIPLE ஆஃபர்... விவரம் உள்ளே!!

பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 299, ரூ. 399 மற்றும் ரூ. 555 விலைகளில் புதிய பிராட்பேண்ட் சலுகையை தனது பயனர்களுக்கு வழங்கவுள்ளது. 

 
ஆம், மார்ச் 1 ஆம் தேதி முதல் வழங்கப்பட இருக்கும் இந்த மூன்று சலுகை குறித்த முழு விவரம் பின்வருமாறு... 
 
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 299 சலுகையில் 100 ஜிபி டேட்டா, 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. 100 ஜிபி தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் ரூ. 399 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 399 சலுகையில் 200 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட 200 ஜிபி டேட்டா தீர்ந்ததும் டேட்டா வேகம் 2Mbps ஆக குறைக்கப்படும். அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.
 
பிஎஸ்என்எல் ரூ. 555 சலுகை:
பிஎஸ்என்எல் ரூ. 555  பிராட்பேண்ட் சலுகையில் 500 ஜிபி டேட்டா 10Mbps வேகத்தில் வழங்கப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட டேட்டா தீர்ந்ததும் வேகம் 2Mbps ஆக குறைக்கப்படுகிறது. அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் சேவை வழங்கப்படுகிறது.