திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 11 ஜனவரி 2021 (14:28 IST)

மிக விரைவில் BSNL 4G...!!

பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

 
சமீபத்தில் இந்தியாவில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை வர்த்தக வெளியீடு பற்றி மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் முடிவு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியது.
 
அதன்படி மத்திய தொலைதொடர்பு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் வழங்குவதாக அறிவித்ததை தொடர்ந்து அரசு டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் விரைவில் நாடு முழுக்க 4ஜி சேவைகளை துவங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 
 
தற்சமயம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 200 MHz பேண்டில் 5 MHZ ஸ்பெக்ட்ரம் வழங்கப்பட்டு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும், நோக்கியா, எரிக்சன், தேஜஸ் நெட்வொர்க், டிசிஎஸ், டெக் மஹிந்திரா என பல்வேறு நிறுவனங்கள் 4ஜி நெட்வொர்க்குகளை கட்டமைக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக தெரிகிறது.