டாக் டைம் தமாகா: பிஎஸ்என்எல் தீபாவளி போனான்ஸா!

Last Updated: சனி, 27 அக்டோபர் 2018 (12:09 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி சேவையை அறிவித்துள்ளது. இம்முறை பிஎஸ்என்எல் தீபாவளி சலுகையில் டாக்டைம்-க்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 
 
தீபாவளி சலுகையின் கீழ் ரூ.180 ரீசார்ஜுக்கு ரூ.190 டாக்டைம், ரூ.410 ரீசார்ஜுக்கு ரூ.440 டாக்டைம், ரூ.510 ரீசார்ஜுக்கு ரூ.555 மதிப்பிலான டாக்டைம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை நவம்பர் 11 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. 
 
புதிய சலுகையில் கூடுதல் டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறதே தவிர மொபைல் டேட்டா அல்லது எஸ்எம்எஸ் போன்றவை வழங்கப்படவில்லை. சமீபத்தில் பிஎஸ்என்எல் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு வருடாந்திர சலுகையை அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 
1. ரூ.1,699 மற்றும் ரூ.2,099 சலுகையில் டேட்டா, வாய்ஸ் கால், எஸ்எம்எஸ் மற்றும் பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது. 
 
2. ரூ.1,699 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 100 எஸ்எம்எஸ் 365 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. 
 
3. ரூ.2,099 சலுகையில் தினமும் 4 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டாவுடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ், பிரத்யேக ரிங்பேக் டோன் வழங்கப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :