வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 12 ஜூலை 2019 (20:17 IST)

விலை குறையும் ஐபோன்: ஆப்பிளுக்கு கொள்ளை லாபம்!!

உயர் ரக ஐபோன்களின் விலை இந்தியாவில் குறைப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவில் ஆப்பிள் நிறுவன சாதனங்களுக்கு அதிகளவு வரவேற்பு இருக்கிறது என்றபோதும், அதிக விலை காரணமாக இதன் விற்பனை குறைவாகவே இருக்கிறது. 
 
எனவே, தமிழகத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஐபோன் X மாடல்களை உற்பத்தி செய்து வரும் நிலையில், பெங்களூருவில் விஸ்ட்ரன் கார்ப் நிறுவனம் ஐபோன் எஸ்இ, ஐபோன் 6எஸ் மற்றும் ஐபோன் 7 மாடல்களை உற்பத்தி செய்கின்றன.
ஐபோன் மாடல்களை இந்தியாவில் உற்பத்தி செய்வதன் மூலம் ஆப்பிள் நிறுவனம் அதிகளவு வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க முடியும். இதன் விளைவாக ஐபோன் விலை கனிசமாக குறைக்கப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. 
 
ஆனால், ஆப்பிள் நிறுவனம் ஐபோன் விலை குறைப்பை குறித்த எந்த ஒரு தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.