ரசிகர்களை கண்கலங்கவைத்த தோனி: வைரலாகும் ரசிகர்களின் கண்ணீர் வீடியோ

Last Updated: வியாழன், 11 ஜூலை 2019 (16:51 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதியில், நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தோனி அவுட் ஆனதால் தோனியின் ரசிகர்கள் கண்கலங்கிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

நேற்று முன் தினம் நடந்த அரையிறுதிப் போட்டியில், நியூஸிலாந்திற்கு எதிராக இந்திய அணி மோதியது. அப்போது மழை குறுக்கிட்டதால் மீதமுள்ள ஆட்டம் நேற்று நடைபெற்றது. முதலாவதாக பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணி, 50 ஓவர்களுக்கு 240 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி, சொற்ப ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. இதனிடையே தோனி 50 ரன்கள் குவித்து ரன் அவுட் ஆகிய நிலையில், போட்டியை கண்டுகொண்டிருந்த தோனியின் ரசிகர்கள் மனம் உடைந்து அழுதனர்.

இவ்வாறு தோனி மீதுள்ள அன்பை வெளிப்படுத்தும் விதமாக ரசிகர்கள் அழுவதை ஒரு காம்பிலேஷன் வீடியோவாக இணையத்தில் பகிர்ந்துள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Heart broken... Still cryingஇதில் மேலும் படிக்கவும் :