முதன்முறையாக 2 பில்லியனுக்கு சரிவை சந்தித்த அமேசான்; காரணம் என்ன?
இரண்டு ஆண்டுகளில் அமேசான் நிறுவனம் முதன்முறையாக லாபத்தில் சரிவு கண்டுள்ளது.
ஆன்லைன் விற்பனையில் உலகமெங்கும் பிரபலமான நிறுவனங்களில் முக்கியமானது அமேசான். சமீபத்தில் விழாக்கால சலுகைகள் மூலம் 19000 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், அந்நிறுவனமோ தாங்கள் நஷ்டமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு 56 பில்லியனில் இருந்த விற்பனை ஒரே ஆண்டில் 70 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஆனாலும் வாடிக்கையாளர்களை ஈர்க்க அமேசான் அறிவித்த பல சலுகைகள், மேலும் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் ஆகியவற்றால் லாபத்தில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தற்காலிகமானதே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் சர்வதேச பொருளாதார ஏற்ற இறக்கங்களும் சரிவுக்கு ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.