புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (18:03 IST)

இதுக்கு பேரு சமூக வலைதளமா? – டிக்டாக்கை விமர்சித்த ஸுகர்பெர்க்

சமூக பிரச்சினைகளை பேச முடியாத ஒரு செயலியை சமூக வலைதளமாக நினைக்க முடியுமா என பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

உலகம் முழுவதிலும் சமூக செயலிகள் எனப்படும் அப்ளிகேசன்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸப் போன்றவை மிக முக்கியமான செயலிகள். வெறும் கேளிக்கையை மட்டுமே நோக்கமாக செயல்படாமல் பல்வேறு சமூக கருத்துக்களையும், போராட்டங்களையும் வெளிப்படுத்தவும் இந்த சமூக செயலிகள் பயன்படுகின்றன.

சமீபத்தில் பேசிய பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுகர்பெர்க் “சமூக வலைதளங்கள் பல்வேறு சமூக மாற்றங்களுக்கும் காரணமாய் அமைந்துள்ளது. ஆனால் டிக்டாக் போன்ற செயலிகள் முழுக்க சீன அரசுக்கு கைக்கூலியாக செயல்பட்டு வருகின்றன. சீன நிறுவனமான டிக்டாக் சென்சார் முறையை பின்பற்றி வருகிறது. அரசுக்கு எதிரான சீனாவுக்கு எதிரான எந்த பதிவையும் அதில் பார்க்க முடியாது. உலகின் மிகப்பெரும் போராட்டமான ஹாங்காங் போராட்டம் குறித்து கூட டிக்டாக்கில் எந்த வீடியோவும் இருக்காது.

இவை சமூக வலைதளங்களே கிடையாது. இதுபோன்ற சேவை நமக்கு தேவையா. வாட்ஸப்பில் இதுப்போன்ற சென்சார் முறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை” என்று கூறியுள்ளார்.