ஆப்பிள் நிறுவனத்தை வாங்கிய அமேசான்?

Last Updated: சனி, 10 நவம்பர் 2018 (19:50 IST)
ஆப்பிள் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனத்தின் பொருட்களை உலகம் முழுக்க விற்பனை செய்யும் உரிமையை அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் வாங்கியுள்ளது. 
 
அமேசான் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களிடையே புதிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் படி ஆப்பிள் தயாரிப்பு பொருட்களை விற்பனை செய்யும் உரிமையை அமேசான் பெற்றுள்ளது.
 
ஒப்பந்தத்தின் படி, விரைவில் தனது வலைதளத்தில் ஆப்பிள் பொருட்களை நேரடியாக விற்பனை செய்ய இருப்பதை அமேசான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 
 
கூடிய விரைவில் ஐபேட் ப்ரோ, ஐபோன் XR, ஐபோன் XS, ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4 மற்றும் ஆப்பிள் பீட்ஸ் ஹெட்போன் உள்ளிட்டவை அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும். 
 
இரு நிறுவனங்களுக்கு இடையேயான ஒப்பந்தம் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி மற்றும் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :