புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 30 செப்டம்பர் 2018 (13:00 IST)

ஆப்பிள் நிறுவன நிர்வாகி என்கவுண்டர் - 2 போலீஸ்காரர்கள் டிஸ்மிஸ்

உத்திரபிரதேசத்தில் ஆப்பிள் நிறுவன நிர்வாகியை சுட்டுக்கொன்ற இரண்டு போலீஸ் அதிகாரிகள் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்கள்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர் விவேக் திவாரி (38). இவருக்கு திருமணமாகி 12 வயதில் ஒரு மகளும், 7 வயதில் ஒரு மகளும் உள்ளனர். விவேக் ஆப்பிள் நிறுவனத்தில் நிர்வாகியாக பணியாற்றி வந்தார்.

 
இந்நிலையில் நேற்று அதிகாலை தனது ஆஃபிஸ் தோழியுடன் காரில் வேகமாக சென்றுகொண்டிருந்த விவேக்கை வாக சோதனையில் ஈடுபட்டிருந்த 2 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
காரை நிறுத்தச்சொல்லியும் அவர் காரை நிறுத்தவில்லை. மாறாக எங்கள் வாகனத்தின் மீது மோதினார். எங்கே எங்களையும் தாக்கிவிடுவாரோ என நினைத்து அவரை சுட்டுக்கொன்றோம். எங்களின் தற்காப்புக்காகவே இந்த துப்பாக்கி சூடு நடந்ததாக விவேக்கை கொன்ற பிரசாந்த் சவுத்ரி, சந்தீப் ஆகிய இரு போலீஸ்காரர்கள் கூறினர்.
இதுகுறித்து பேசிய உத்திரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், 2 போலீஸ்காரர்களும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்கள். இச்சம்பவம் தொடர்பாக  சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
 
உயிரிழந்த விவேக் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். அவரது குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என யோகி ஆதியநாத் தெரிவித்தார்.