ஒன்லி டிஜிட்டல்... ரூட்டை மாற்றிய மைக்ரோசாஃப்ட்!

Sugapriya Prakash| Last Modified புதன், 8 ஏப்ரல் 2020 (15:26 IST)
இனி ஜூலை 2021 வரை அனைத்து நிகழ்வுகளும் டிஜிட்டல் முறையில் நடைபெறும் என மைக்ரோசாஃப்ட் தெரிவித்துள்ளது.
 
கடந்த மாத இறுதியில் சீனாவில் உருவெடுத்த கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பல நாடுகள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், தொழில்துரை கடுமையாக பாதித்துள்ளது. 
 
இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் அனைத்து நிகழ்வுகளும் 2021 ஜூலை வரை டிஜிட்டல் முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவித்து இருக்கிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் ஊழியர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகளின் கால அட்டவணையையும் மாற்றியமைத்து வருகிறது என தகவல் வருகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :