கமலுக்கு குட்டு, அஜித்துக்கு பாராட்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூ

kadambur raju
கமலுக்கு குட்டு, அஜித்துக்கு பாராட்டு: அமைச்சர் கடம்பூர் ராஜூ
Last Modified புதன், 8 ஏப்ரல் 2020 (14:22 IST)
கொரோனா வைரஸ் காரணமாக நாடே தத்தளித்து வரும் நிலையில் இந்த நேரத்திலும் ஒரு சிலர் மலிவான அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்வதை விட்டுவிட்டு மத்திய மாநில அரசுகளை குறை சொல்லியும், பிரதமருக்கு லெட்டர் எழுதியும் வரும் கமலஹாசனுக்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இது குறித்து கருத்து கூறிய செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் ’விமர்சனம் செய்யும் நேரம் இது கிடையாது என்றும் நல்ல ஆலோசனை வழங்கலாம் என்றும் கமலஹாசனுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்

மேலும் கொரோனோ நிவாரணம் வழங்கிய நடிகர் அஜித்குமாருக்கு நன்றி என்றும் அவரைப் போல அனைத்து நடிகர்களும் தங்களால் முடிந்த உதவியை செய்ய முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார். கமலுக்கு குட்டு வைத்தும் அஜித்துக்கு பாராட்டு தெரிவித்தும் அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் கூறிய இந்த கருத்து தற்போது வலைதளங்களில் வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :