ரூ.597 ரீசார்ஜ்: வோடபோன் / ஏர்டெல் - சிறந்தது எது?

Last Modified திங்கள், 22 அக்டோபர் 2018 (14:28 IST)
தொலைத்தொடர்பு நிறுவனக்களுக்கு மத்தியில் போட்டி அதிகரித்து விட்டதால், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகள் அதிகப்படியாக வழங்கப்படுகிறது. 
 
அதன்படி வோடபோன் நிறுவனம் தனது பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.597 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகை ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.597 சலுகைக்கு போட்டியாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வோடபோன் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் 10 ஜிபி டேட்டா, 168 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இந்த சலுகையின் வேலிடிட்டி 112 நாட்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 
 
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் அளவு தினமும் 250 நிமிடங்கள் என்பதால் பயனர்கள் தினமும் 4 மணி நேரம் 10 நிமிடங்கள் மட்டுமே பேச முடியும். 
 
ஆனால், ஏர்டெல் வழங்கும் சலுகையில் வாய்ஸ் கால் பேச எவ்வித கட்டுப்பாடும் விதிப்பதில்லை, மேலும் வேலிடிட்டி காலம் 168 நாட்களாக ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :