திங்கள், 9 மார்ச் 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
Written By Siva
Last Updated : சனி, 7 பிப்ரவரி 2026 (16:45 IST)

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!

ஒரே வாரத்தில் சுமார் ரூ.1.50 லட்சம் குறைந்த வெள்ளி விலை.. இன்னும் குறையும் என எச்சரிக்கை..!
இந்திய உள்நாட்டுச் சந்தையில் வெள்ளியின் விலை கடந்த சில நாட்களாக கடும் சரிவை சந்தித்து வருகிறது. ஜனவரி 29 அன்று ஒரு கிலோ வெள்ளி ரூ.4,20,048 என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட நிலையில், தற்போது பலத்த விற்பனை அழுத்தம் காரணமாக விலை மளமளவென குறைந்துள்ளது. இன்று சனிக்கிழமை காலை நிலவரப்படி, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.2,85,000 ஆக உள்ளது.
 
அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிப்பு மற்றும் முதலீட்டாளர்கள் லாபத்தை ஈட்டியது போன்றவை இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. குறிப்பாக, சூரிய ஆற்றல் மற்றும் பேட்டரி தயாரிப்பு போன்ற தொழிற்சாலைகளில் வெள்ளிக்கு பதிலாக செம்பை பயன்படுத்தும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்த தொழில்நுட்ப மாற்றத்தால் வெள்ளிக்கான தேவை உலகளவில் குறைய தொடங்கியுள்ளது.
 
சந்தை நிபுணர்களின் கணிப்புப்படி, இது ஒரு தற்காலிக மீட்சியாக மட்டுமே இருக்கலாம். வரும் காலங்களில் சர்வதேச சந்தையில் வெள்ளி இன்னும் பலமாக சரிந்து, நடுத்தர காலத்தில் ஒரு அவுன்ஸ் $25 முதல் $30 வரை செல்ல வாய்ப்புள்ளதாக எச்சரிக்கின்றனர். "விலை உச்சத்தை தொட்டுவிட்டதால், இனி வரும் காலங்களில் முதலீட்டாளர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்" என்பது நிபுணர்களின் அறிவுரையாக உள்ளது.
 
Edited by Siva