வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 15 அக்டோபர் 2018 (10:47 IST)

100 ஜிபி போனஸ் டேட்டா: ஏர்டெல் தேங்க்ஸ் ஆஃபர்!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஏர்டெல் தேங்க்ஸ் என்ற பெயரில் பல சலுகைகளை வழங்கியுள்ளது. சலுகைகளின் விவரம் பின்வருமாறு...
 
1. மாதம் ரூ.100-க்கும் அதிக கட்டணம் செலுத்தும் பயனர்களுக்கு கூடுதல் சலுகை எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி வழங்கப்படும்.
 
2. பயனர்களுக்கு பிரீமியம் டிஜிட்டல் தரவுகள் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் வவுச்சர்கள் வழங்கப்படும்.
 
3. போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு ரூ.1500 மதிப்புள்ள நெட்ஃபிளிக்ஸ் சந்தா 3 மாதத்திற்கு வழங்கப்படுகிறது. 
 
4. மேலும், பிளிப்கார்ட் தளத்துடன் இணைந்து ரூ.4,500 மதிப்புள்ள சலுகைகள், 100 ஜிபி போனஸ் டேட்டா பிளிப்கார்ட் பிரத்யேக ஸ்மார்ட்போன்களை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது. 
 
5. ஏர்டெல் ஜீ5 தரவுகளை தனது பிரீபெயிட் மற்றும் போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு வழங்குகிறது. இதில் ரூ.199 மற்றும் அதற்கும் அதிக தொகை கொண்ட சலுகைகளை பயனர்கள் தேர்வு செய்ய வேண்டும்.