1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 9 நவம்பர் 2018 (12:30 IST)

ஜியோவுக்கு ட்ஃப் கொடுக்கும் ஏர்டெல்: வோடபோன் கொஞ்சம் வீக்தான்!

இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவங்களுக்கு இடையே யார் முதலிடம் என்பதை நிரூபிக்க கடும் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியால் வாடிக்கையாளர்களுக்கு ஆதாயம் கிடைக்கிறது. 
 
பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ஏர்டெல் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜியோவுக்கு போட்டியாக ரூ.398 விலையில் புதிய சலுகையை அறிவித்துள்ளது. 
 
ஏர்டெல் ரூ.398: 
இந்த சலுகையில் அன்லிமிட்டெட் கால்ஸ், தினமும் 100 எஸ்எம்எஸ், 1.5 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. அதன்படி புதிய சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 105 ஜிபி டேட்டா கிடைக்கிறது.
 
ஜியோ ரூ.398: 
ரூ.398 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. 
 
வோடபோன் ரூ.399: 
வோடபோன் வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.4 ஜிபி டேட்டா, 70 நாட்கள் வேலிடிட்டி, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. வாய்ஸ் கால் மேற்கொள்ள தினமும் 250 நிமிடங்களும், வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என கட்டப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.