வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 3 நவம்பர் 2018 (17:30 IST)

மொபைல் நெட்வொர்க்கின் ராஜாவாக ஜியோ –ஏர்டெல், ஐடியா பின்னடைவு

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ இந்தியத் தொலைத் தொடர்புத் துறையையே மறுகட்டமைப்பு செய்துள்ளது. மற்ற அனைத்து நெட்வொர்க்குகளையும் விட அதிகளவில் வாடிக்கையாளர்களைப் பெற்று வேகமாக முன்னேறி வருகிறது.

ரிலையன்ஸ் நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஜியோ சிம்களை அறிமுகப்படுத்தி இலவச அழைப்பு மற்றும் மொபைல் டேட்டா சேவைகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு இலவசமாக கொடுத்தது. அதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் மற்ற நெட்வொர்க்குகளில் இருந்து ஜியோவுக்கு மாற ஆரம்பித்தனர்.

இதனால் மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், வோடபோன், ஐடியா, டொகோமா போன்ற நெட்வொர்க்குகள் ஆட்டம் காண ஆரம்பித்தன. வாடிக்கையாளர்களை இழப்பதைத் தடுக்க அவையும் பல சலுகைகளை வழங்கி வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ள கடுமையாக போராடி வருகின்றன. இப்போது கிட்டத்தட்ட எல்லா நிறுவனங்களும் ஒரே அளவிலான சலுகைகளையே கொடுத்து வருகின்றனர். இருந்தாலும் மக்கள், தங்கள் மனதில் ஜியோவுக்கே முதலிடம் கொடுத்து வருகின்றனர்.

வேகமாக வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வரும் ஜியோ கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 1 கோடியே 30 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. அதே சமயம் மற்ற முன்னனி நிறுவனங்களான ஏர்டெல் தங்கள் வாடிக்கையாளர்களில் 23 லட்சம் பேரையும் ஐடியா 40 லட்சம் வாடிக்கையாளர்களையும் இழந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக 25.2 கோடி வாடிக்கையாளர்களுடன் ஜியோ வேகமாக முதலிடம் நோக்கி முன்னேறி வருகிரது.