ஒன்லி 4ஜி: 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்களின் நிலை என்ன?
ஏர்டெல் நிறுவனம் தனது 2ஜி / 3ஜி சேவையை ஒரேகட்டமாக 4ஜி-க்கு மாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் 2ஜி / 3ஜி வாடிக்கையாளர்களின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
பிரபல தொலைத்தொடர்பு நிறுவனமான ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ வந்ததும் கடும் சரிவை சந்தித்த வருகிறது. இதனால் ஜியோவுக்கு போட்டியாக முழு பலத்துடன் களமிறங்க அனைத்து சேவையையும் 4ஜியாக மாற்ற உள்ளது.
இது குறித்து ஏர்டெல் தரப்பில் வெளியான தகவல் பின்வருமாறு, ஏர்டெல் நிறுவனத்தின் 2ஜி மற்றும் 3ஜி சேவையை பயன்படுத்தி வரும் அனைத்து வாடிக்கையாளர்களும் அதிவேக 4ஜி நெட்வொர்க்கிற்கு மாற்றப்பட இருக்கின்றனர்.
இதற்காக ஏர்டெல் நிறுவனம் 900 மெகாஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரக்கை பயன்படுத்தி 4ஜி நெட்வொர்க் சேவையை வழங்க இருக்கிறது. எங்களின் 2ஜி சேவைகள் 1800 மெகாஹெர்ட்ஸ் பேன்ட் மூலம் வழங்கப்படும்.
ஆனால், 3ஜி நெட்வொர்க்கில் இருந்து போதுமான வருவாய் கிடைப்பதில்லை, 3ஜி தொழில்நுட்பம் தனது முடிவை நெருங்கிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.