1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (14:11 IST)

இலவச அவுட் கோயிங்; 40 ஜிபி டேட்டா வழங்கும் ஏர்டெல்...

இந்திய தொலைத்தொடர்பு துறையில், பல நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வழங்கி வருகின்றன. இந்த வலையில் ஏர்டெல் தற்போது புதிய சலுகையை வழங்கியுள்ளது. 
 
ரிலையன்ஸ் ஜியோவுக்கு போட்டியாக தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.499 லிலையில் 40 ஜிபி 3ஜி / 4ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும், அன்லிமிட்டெட் அழைப்புகள், ரோமிங்கின் போது இலவச இன்கமிங் மற்றும் அவுட் கோயிங் சேவையையும் வழங்குகிறது. 
 
இந்த புதிய ஏர்டெல் சலுகை போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மாத வேலிடிட்டி வழங்கப்படுகிறது. இதுதவிர அமேசான் பிரைம், வின்க் மியூசிக், லைவ் டிவி மற்றும் ஸ்மார்ட்போன் டேமேஜ் ப்ரோடெக்ஷன், அதோடு ஒரு ஆண்டு சந்தாவும் வழங்கப்படுகிறது.
 
ஜியோவின் ரூ.498 திட்டத்தில், 182 ஜிபி டேட்டா, தினமும் 2 ஜிபி அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் இலவச ரோமிங் ஆகியவை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.