1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 16 மார்ச் 2018 (15:40 IST)

ஏர்செல் 50% வாடிக்கையாளர்கள் ஏர்டெல் பக்கம்...

ஏஎசெல் திவால் ஆனதும் வாடிக்கையாளர்கள் தங்களது ஏர்செல் மொபைல் எண்ணை மற்ற நெட்வொர்க் நிறுவனங்களுக்கு போர்ட் செய்து வருகின்றன. ஏர்செல் போர்ட்டிங் காரணமாக மற்ற நிறுவனங்கள் உற்சாகத்தில் உள்ளன. 
 
அந்த வகையில், தமிழ் நாடு மற்றும் சென்னையை சேர்ந்த சுமார் 15 லட்சம் ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் நெட்வொர்க்-க்கு மாறியுள்ளனர். இந்த தகவலை ஏர்டெல் வெளியிட்டுள்ளது. 

அதாவது, ஏர்செல் நெட்வொர்க்-ல் இருந்து போர்ட் அவுட் செய்திருக்கும் வாடிக்கையாளர்களில் சுமார் 50% பேர் ஏர்டெல் நெட்வொர்க்-ஐ தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இது குறித்து ஏர்செல் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஏர்செல் வாடிக்கையாளர்கள் ஏர்டெல் சேவையை தேர்வு செய்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏர்செல் வாடிக்கையாளர்களுக்கு தலைசிறந்த சேவையை ஏர்டெல் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், நேற்று ஏர்டெல் நெட்வொர்க்கிலும் சிக்னல் பிரச்சனை ஏற்பட்டு பின்னர் சரிசெய்யப்பட்டது குறிப்ப்பிடத்தக்கது.