திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2019 (13:14 IST)

புது ரூட்டை பிடித்த ஏர்டெல்: இனி ஜியோ பாடு திண்டாட்டம்தான்...

ஏர்டெல் நிறுவனம் சில பிஸ்னஸ் வியூகங்களை பின்பற்ற முடிவெடுத்து அதன் மூலம் லாபம் பார்க்க திட்டமிட்டுள்ளதாம். 
 
ஆன், ஏர்டெல் நிறுவனம் மூன்று புதிய பிஸ்னஸ் யுக்திகளை நடைமுறைப்பட்டுத்த திட்டமிட்டுள்ளதாம். இதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்தாலும் லாபம் இருக்கும் என கணக்கிட்டுள்ளதாம். 
 
வாடிக்கையாளர்களை 4ஜி சேவைக்கு மொத்தமாக மாற்றூவது; டேட்டா பயன்பாட்டை அதிகரிக்க செய்வது; மார்ச் 2020-க்குள் 3ஜி சேவையை இழுத்து மூடுவது இந்த மூன்றுதான் ஏர்டெல் தற்போது நடைமுறைப்படுத்த உள்ள யுக்திகளாம். 
உதாரணமாக ஏர்டெல் நிறுவனம் மாதம் குறைந்தபட்சம் ரூ.35 ரீசார்ஜ் திட்டத்தை கொண்டு வந்ததன் காரணமாக வாடிக்கையாளர்களை இழந்தாலும், அந்த ஒரு திட்டத்தால்தான் ஏர்டெல் லாபம் பார்த்தது. 
 
எனவே, இதே போல் ஏர்டெல் நடைமுறைப்படுத்த உள்ள 3 யுக்திகளால் வாடிக்கையாளர்கல் குறைந்தாலும் இருப்பவர்களால் லாபம் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கிறது. வழக்கம் போல் ஜியோவை பார்த்து சலுகை வழங்காமல் தனித்து சில நகர்வுகளை ஏர்டெல் எடுத்துள்ளதால் மற்ற நிறுவனங்கள் ஏர்டெல்லின் நகர்வுகளை கவனத்துடன் கையால வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.