வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 26 ஜூலை 2019 (12:48 IST)

வச்சா குடுமி, அடிச்சா மொட்டை... கடுப்பேற்றும் ஏர்டெல் டகால்டி ஆஃபர்கள்!!

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக #AirtelThanks என்ற பெயரில் சலுகைகளை வழங்கி வருகிறது. 
 
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட இந்த ஏர்டெல் தேங்ஸ் திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு பல்வேறு சலுகைகளை ஏர்டெல் நிறுவனம் வழங்கி வருகிறது. 
 
ஆனால், இப்போது வழங்கியுள்ள ஒரு சலுகை சில வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் சிலரை கடுப்பாக்கியுள்ளது. ஆம், ரூ.399-க்கு ரீசார்ஜ் செய்வோருக்கு 33 ஜிபி அல்லது 400 எம்பி டேட்டா கூடுதலாக வழங்குகிறதாம். 
ஏர்டெல் ரூ.399 பிரீபெயிட் சலுகையில் ஏற்கனவே தினமும் 1 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ்., இலவச ஏர்டெல் டி.வி. பிரீமியம், விண்க் மியூசிக் உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 
 
வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு ஏர்டெல் இது போன்ற சலுகைகளை வழங்கி வந்தாலும் 33 ஜிபி-க்கும், 400 எம்பி-க்கும் எவ்வளவு வித்தியாசம் என வாடிக்கையாளர்கள் கடுப்பாகியுள்ளனர். 
ஏர்டெல் தேன்ங்க்ஸ் மூலம் ஏர்டெல் வழங்கும் மேலும் சில சலுகைகள் பின்வருமாறு... 
1. ஒரு வருட அமேசான் பிரைம், 3 மாத நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் பல ஸ்ட்ரீமிங் தளங்களின் மெம்பர்ஷிப் 
2. ஏர்டெல் ப்ரீபெய்டு மற்றும் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு இலவச ஹலோ ட்யூன் 
3. புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 கேஷ்பேக்
4. ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு திட்டத்திற்கான சந்தா