வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 2 ஆகஸ்ட் 2019 (15:16 IST)

ஜியோ - ஏர்டெல் இடையே கேம் ஆடும் வோடபோன்: ஆப்பு யாருக்கு??

வோடபோன் நிறுவனம் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள சலுகையில் சில மாற்றங்களை மேற்கொண்டு வாடிக்கையாளர்களுக்கு றிமுகம் செய்துள்ளது. 
 
ஆம், வோடபோன் நிறுவனத்தின் ரூ.255 பிரீபெயிட் சலுகையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த சலுகையில் தினமும் 2.5 ஜிபி டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படவுள்ளது. 
 
இதற்கு முன்னதாக இதே சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்பட்டு வந்தது. இப்போது 2.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதோடு வோடபோன் பிளே சந்தாவும் வழங்கப்படுகிறது.
ஆனால், வோடபோனின் இந்த சலுகை மாற்றம் ஜியோ மற்றும் ஏர்டெல்லுக்கு போட்டியாக இல்லாமல் நடுத்தரமாக உள்ளது. ஜியோவின் ரூ.299 பிரீபெயிட் சலுகையில் தினமும் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் ரூ.249 சலுகையில் தினமும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
 
தற்போது வோடபோன் இவை இரண்டிற்கும் இடையே விலை மற்றும் சலுகைகளை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.