வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 9 டிசம்பர் 2018 (16:32 IST)

ஏர்டெல் புது ரீசார்ஜ் சலுகை: விவரம் உள்ளே..

ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 48 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புது சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 
 
ஆம், ரூ.289 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 1 ஜிபி மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் ஆகியவை வழங்கப்படுகிறது.
 
இதற்கு போட்டியாக வோடபோன் ரூ.279 விலையில் 84 நாட்கள் வேலிடிட்டியில், அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 4 ஜிபி டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.
 
இதேபோன்று ஐடியா ரூ.295 சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், 5 ஜிபி மொபைல் டேட்டா, தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்குகிறது.