செவ்வாய், 27 ஜனவரி 2026
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 30 நவம்பர் 2018 (15:11 IST)

தினுசு தினுசாய் ஆஃபர் வழங்கும் ஏர்டெல்!

தினுசு தினுசாய் ஆஃபர் வழங்கும் ஏர்டெல்!
தொலைத்தொடர்பு துறையில் ஜியோவின் போட்டியை சமாளிக்க ஏர்டெல் நிறுவனம் பல சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது போஸ்ட்பெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. 
 
புதிய சலுகை ஏர்டெல் போஸ்ட்பெயிட் வாடிக்கையாளர்கள், ஏர்டெல் பிரீபெயிட், ஏர்டெல் பிராட்பேன்ட், ஏர்டெல் கார்ப்பரேட் உள்ளிட்ட வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
 
அதாவது ஏற்கனவே ஏர்டெல் சேவையை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் புதிய போஸ்ட்பெயிட் பயனர்களை ஏர்டெல் சேவையில் சேர்த்து விடும் போது ரூ.1500 வரை ஆஃபர் வழங்கபப்டுகிறது. 
 
இந்த 1500 ரூபாய் கூப்பன்கள் மூலம் மை ஏர்டெல் செயலில் சேர்க்கப்படுமாம். இந்த ரூ.1500 மதிப்புள்ள கூப்பனை பெற என்ன செய்ய வேண்டும் என்பது பின்வருமாறு,
தினுசு தினுசாய் ஆஃபர் வழங்கும் ஏர்டெல்!
ஆன்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் செயலியில் உள்ள மை ஏர்டெல் செயலியில் லாக் இன் செய்து நோட்டிஃபிகேஷன் பகுதியில் காணப்படும் Rs.150 discount on your postpaid bill ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 
பின்னர் ரெஃபரல் லின்ங்கை காப்பி செய்து, ஷேர் செய்ய வேண்டும். நீங்கள் அனுப்பும் லின்க்கை உங்களது நண்பர் கிளிக் செய்து  வழிமுறைகளை பூர்த்தி செய்து, ஏர்டெல் சேவையில் இணையும் பட்சத்தில் உங்களது எண்ணிற்கும் புதிதாய் ஏர்டெல் சேவையில் இணைந்த நண்பருக்கும் தள்ளுபடி கூப்பன்கள் வழங்கப்படும்.