புதன், 5 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 1 டிசம்பர் 2018 (16:15 IST)

5ஜிபி டேட்டா + 100% கேஷ்பேக்: ஜமாய்க்கும் ஏர்டெல்!

ஏர்டெல் நிறுவனம் தனது ப்ரீபெய்ட் பயனர்களுக்கு அட்டகாசமான சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் ஏர்டெல் நிறுவனம் கூடுதலாக 5 ஜிபி டேட்டாவை இலவசமாக வழங்கவுள்ளது.
 
அதாவது வாடிக்கையாளர்கள் தங்களது ப்ரீபெய்ட் திட்டம் காலாவதியாவதற்கு முன் ரூ.249 ரீசார்ஜ் திட்டத்தில் ரீசார்ஜ் செய்துவிட்டால், கூடுதல் 5ஜிபி, 4ஜி டேட்டா இலவசமாக வழங்கப்படும். 
 
ரூ.249 திட்டத்தில் அன்லிமிடெட் ரோமிங் சேவை, அன்லிமிடெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால்லிங், தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் 28 நாட்களுக்கு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த கூடுதல் டேட்டா சலுகை ரூ.199 ரீசார்ஜ் திட்டத்திற்கும் பொருந்தும். அதோடு 100% கேஷ் பேக் சலுகை 2 வருட வேலிடிட்டியுடன் வரும் கூப்பனாக வழங்கப்படும்.