4ஜி ஸ்மார்ட்போனுக்கு இன்ஸ்டெண்ட் கேஷ்பேக்: விவரம் உள்ளே!

Last Modified வியாழன், 25 அக்டோபர் 2018 (12:13 IST)
ஏர்டெல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை ஒன்றை அறிவித்துள்ளது. இந்த சலுகையில் 4ஜி ஸ்மார்ட்போன் வாங்குபவர்களுக்கு கேஷ்பேக் வழங்குவதாக தெரிவித்துள்ளது. 

 
 
அதாவது, 4ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் பயனர்களுக்கு ரூ.2,000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த கேஷ்பேக் தொகை, மைஏர்டெல் அக்கவுன்ட்டில் ரூ.50 மதிப்பு கொண்ட 40 வவுச்சர்கள் வடிவில் வழங்கப்படுகின்றன. 
 
அதோடு, கூடுதல் டேட்டா வழங்கவதாகும் ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த கூப்பன்களை ரீசார்ஜ் செய்யும் போது சலுகைகளளை பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
இந்த கேஷ்பேக் சலுகையை பெற...
1. ஆன்லைன் அல்லது ஆஃப்லைனில் புதிய 4ஜி ஸ்மார்ட்போனினை வாங்க வேண்டும்,
2. அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் புதிய 4ஜி ஸ்மாரட்போனி்ல் 4ஜி சிம்கார்ட் போட வேண்டும்,
3. மைஏர்டெல் செயலி மூலம் ரீசார்ஜ் அல்லது பில் செலுத்தும் போது கேஷ்பேக் கூப்பன்கள் வழங்கப்படும்,
4. ஒரு சமயத்தில் ஒரே கூப்பனை மட்டுமே பயன்படுத்த முடியும்
டிஜிட்டல் கூப்பன்கள் வழங்கப்பட்ட தேதியில் இருந்து 40 மாதங்கள் வேலிடிட்டி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதில் மேலும் படிக்கவும் :