பெரிதான ஏர்டெல் குடும்பம்; மந்தமானதா ஜியோ வளர்ச்சி??
ஏர்டெல் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோவை காட்டிலும் அதிக வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது.
தொலைத்தொடர்பு துறையின் வளர்ச்சி குறித்த அறிக்கையை மத்திய டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஆகஸ்ட் மாத வாக்கில் ரிலையன்ஸ் ஜியோவை விட ஏர்டெல் நிறுவனம் 10 லட்சம் வாடிக்கையாளர்களை அதிகமாக சேர்த்து இருக்கிறது.
ஆம், ஏர்டெல் நிறுவனம் 28.99 லட்சம் வாடிக்கையாளர்களையும், ஜியோ நிறுவனம் 18.64 லட்சம் வாடிக்கையாளர்களையும், வி (வோடபோன் ஐடியா) நிறுவனம் 12.28 லட்சம் வாடிக்கையாளர்களையும் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.