திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 13 ஏப்ரல் 2018 (19:44 IST)

ஆதார் தகவல் கசிய முக்கிய காரணம் என்ன தெரியுமா?

இந்தியா முழுவதும் தனி நபர் ஆதரமான ஆதார் கார்ட் அனைவருக்கும் வழங்கப்பட்டுவருகிறது. அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் மானியங்களை பெற ஆதார் இணைக்கப்பட வேண்டியுள்ளது. 
 
ஆனால், இவ்வாறு இணைக்கும் தனி நபர் ரகசியங்களுக்கு பாதுகாப்பு இல்லை. பல நேரங்கள் ஆதார் மூலம் தனி நபர் ரகசியங்கள் கசிவதாகவும், ஆதார் தகவல்கள் விற்கப்படுவதாவும் செய்திகள் வெளியாகிறது. 
 
இந்நிலையில், ஆதார் தகவல் கசிவதற்கான முக்கிய காரணம் ஒன்றை ஆதார் அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ வெளிடிட்டுள்ளது. அதில், ஆதார் அட்டைகளை லேமினேட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
 
பொதுவாக பிளாஸ்டிக் மற்றும் லேமினேட் செய்யப்பட்ட கார்டுகளின் க்யூஆர் கோட் பல சமயங்களில் வேலை செய்வதில்லை. அதேபோல இதில் உள்ள தகவல்கள் கசிவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே, உரிமையாளருக்கு தெரியாமலேயே அவரை பற்றிய விவரங்கள் மற்றொருவருக்கு செல்கிறது. 
 
ஆதார் அட்டையை டவுன்லோட் செய்து வெறும் காகிதமாக இருந்தால் கூட செல்லுபடியாகும். இதை போல எம்ஆதாரும் ஏற்புடையதே. எனவே, பொதுமக்கள் ஆதார் எண்ணை லேமினேட் கார்டு பெறுவதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.