800 பேருக்கு ஒரே பிறந்த தேதி: ஆதார் அட்டையில் குளறுபடி!!
அரசின் அனைத்து திட்டங்களுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு வரும் நிலையில், ஆதார் அட்டையி நடக்கும் குளறுபடிகள் குறைந்தபாடில்லை.
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள கைந்திகட்டா கிராமத்தில் அனைவருக்கும் ஆதார் கார்டுக்கு புகைப்படம் எடுக்கப்பட்டது.
பின்னர் இங்குள்ள சுமார் 800 குடும்பங்களுக்கு ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. ஆதார் கார்டில் பெயர், முகவரி போன்ற விவரங்கள் சரியாக இருந்த நிலையில், பிறந்தநாள் மட்டும் அனைவருக்கும் ஜனவரி 1 என அச்சிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிராமத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், அனைவருக்கும் ஆதார் ஆட்டை வழங்கப்படும் அதனால் எந்த பயனும் இல்லை என தெரிவித்துள்ளனர்.