புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 11 மே 2018 (16:40 IST)

கிரெடிட் கார்ட் பயன்படுத்துபவர்கள் கவனிக்க வேண்டிய கட்டணங்கள்...

பொதுவாக அனைவரும் கிரெடிட் கார்ட் பயன்படுத்தினால், கடன் சிக்கலில் சிக்கிகொள்வர் என பரவலான பேச்சு இருந்து வருகிறது. ஆனால், கிரெடிட் கார்டை முறையாக  பயனபடுத்தினால் போதும். 
 
தற்போது கிரெடிட் கார்டு பயன்பாட்டின் போது முக்கியமாக தெரிந்துக்கொள்ள வேண்டிய எழு முக்கிய கட்டணங்கள் குறித்து அறிந்துகொள்வோம்... 
 
1. ஆண்டுக் கட்டணம் 
2. வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்
3. பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்
4. அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணங்கள் 
5. கால தாமதத்திற்கான கட்டணம்
6. தொகை பரிமாற்றத்திற்கான கட்டணம்
 
ஆண்டு கட்டணம்: கிரெடிட் கார்டு வழங்குவதற்கு எவ்வித கட்டணங்களும் வசூலிப்பதில்லை. சில வங்கிகள் முதலாண்டில் மட்டும் கட்டணங்களுக்கு விலக்கு அளித்து விட்டு இரண்டாம் ஆண்டிலிருந்து கட்டணங்களை விதிக்கும். 
 
வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள்: பொதுவாக வங்கிகள், கிரெடிட் கார்டை பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளுக்கு 50 நாட்கள் வரை வட்டி வசூலிப்பதில்லை. ஆனால் 50 நாட்களுக்குள் செலவு தொகையை வங்கிக்கணக்கில் திரும்ப செலுத்தவில்லை என்றால் கடனுக்கான வட்டி மற்றும் நிதிசார் கட்டணங்கள் விதிக்கப்படும். 
 
பணம் எடுப்பதற்கான கட்டணங்கள்: கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஏடிம்மில் பணம் எடுக்கலாம். ஆனால், இதை அவசர தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. ஏனென்றால், கிரெடிட் கார்டை பளன்படுத்தி ஏடிஎம்மில் பணம் எடுத்தால் உடனடியாக அத்தொகைக்கு வட்டி விதிக்கப்படும். 
 
அதிகப்படியான செலவுகளுக்கான கட்டணம்: உங்களுக்கு என்று வரையறுக்கப்பட்ட தொகைக்கும் மேல் கடன் பரிவர்த்தனை செய்தாலோ அல்லது பணம் எடுத்தாலோ உங்களுக்கு அபராத கட்டணம் விதிக்கப்படும். 
 
கால தாமதத்திற்கான கட்டணம்: கிரெடிட் கார்டு மீதான கால தாமத கட்டணம் நமக்குப் பலவகைகளில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், கிரடிட் ஸ்கோர் பாதிக்கப்படும். மேலும், அபராத கட்டணம் செலுத்த வேண்டி வரும். 
 
தொகை பரிமாற்றத்திற்கான கட்டணம்: ஒரு கிரடிட் கார்டு மீதான கடன் தொகை மற்றும் பாக்கி தொகையை இன்னொரு கிரடிட் கார்டு மூலமாக செலுத்தும் பொழுது அதற்கென தனியாகக் கட்டணம் வசூலிக்கப்படும்.