40,000 கிரெடிட் கார்ட் தகவலை கசியவிட்ட பிரபல மொபைல் நிறுவனம்...
இந்திய சந்தையில் சமீபத்தில் பிரபலாமான ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ். தற்போது, ஒன்பிளஸ் தனது வாடிக்கையாளர்களின் கிரெடிட் கார்ட் ரகசியங்களை கசியவிட்டு சிக்கலை சந்தித்துள்ளது.
ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் பலரின் தகவல்கள் திருடப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கு ஒன்பிளஸ் முதலில் மறுப்பு தெரிவித்தாலும், தற்போது அதை ஒப்புக்கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் ஆன்லைன் ஸ்டோரில் பலரும் ஸ்மார்ட்போனை வாங்கும் போது தங்களது கிரெடிட் கார்ட் விவரங்களை அதில் பதிவு செய்வர். இந்த விவரங்கள்தான் தற்போது திருடப்பட்டு இருக்கிறது. இந்த திருட்டு நிறுவனத்திற்கும், மக்களுக்கும் தெரியாமல் நடந்துள்ளது.
மென்பொருள் கோளாறு காரணமாக இது நடந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதற்கான உண்மையான காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை. சுமார் 40,000 பேரின் கிரெடிட் கார்ட் தகவல்கள் திருடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் திருட்டு கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து நடந்து வருகிறது. ஆனால் இது பற்றிய விஅரம் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்புதான் தெரியவந்துள்ளது. தற்போது தற்காலிகமாக ஒன்பிளஸ் இணையத்தில் ஆன்லைன் விற்பனையை நிறுத்தி வைத்திருக்கிறது.