திங்கள், 27 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By
Last Modified: திங்கள், 9 நவம்பர் 2020 (12:10 IST)

தீபாவளி நாளில் இரண்டு விதமான குளியல் செய்யவேண்டுமா...?

தீபாவளியன்று நமக்கு இருவிதமான குளியலை செய்யும்படி சாஸ்திரம் குறிப்பிடுகிறது. அன்று வெந்நீரில் அதிகாலைப் பொழுதில் ஓரு முகூர்த்த நேரம் கங்கை  நதியே இருப்பதாக ஐதீகம். 

அந்த நேரத்தில் எண்ணெய் ஸ்நானமாக வெந்நீரில் குளிக்க வேண்டும். அப்போது, நரகாசுரன், சத்திய பாமா, கிருஷ்ணர், பூமாதேவி நினைவு நமக்கு வரவேண்டும். இதற்கு "கங்கா ஸ்நானம்" என்று பெயர்.
 
வெந்நீர் குளியலுக்குப்பின், சூரியன் உதிந்த பின், ஆறு நாழிகை நேரம் வரை, காவிரி உட்பட எல்லா புனித நதிகளும் குளிர்ந்த நீரில் இருப்பதாக ஐதீகம். அப்போது, குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதற்கு, “துலாஸ்நானம்” என்று பெயர். இரண்டாம் ஸ்நானத்தில் பரமேஸ்வரன் நினைவுவரவேண்டும்.
 
வெளி உடம்பினை தூய்மையாக்கின பின், பெரிய ஸ்நானம் ஒன்றுண்டு. அதுதான் நம் உள் அழுக்கை எல்லாம் அகற்றும் "கோவிந்தேதி ஸதா ஸ்நானம்". அப்போது, நம் ஜீவன் தூய்மையாகிறது. 
 
பெரிய ஸ்நானம் என்று சொன்னதால், மற்ற இரண்டும் முக்கியமில்லை என்று எண்ணிவிடக்கூடாது. இந்த மூன்றுமே முக்கியம் தான் என்பதை உணர்ந்து, ஸ்நானம் செய்வது நல்லது.