வியாழன், 9 ஜனவரி 2025
  1. ப‌ல்சுவை
  2. ‌சிற‌ப்‌பித‌ழ்க‌‌ள்
  3. தீபாவளி மலர்
Written By ஏ.சினோஜ்கியான்
Last Updated : ஞாயிறு, 8 நவம்பர் 2020 (17:40 IST)

தீபாவளியும் கடைகளில் கூட்டமும் நமது தற்காப்பு முறைகளும்….

தீபாவளிக்கு ஷாப்பிங் செய்வது என்பது மக்களால் தவிர்க்க முடியாது. ஆனால் அப்படி செல்லும்போது நமக்குத் தேவையானவைகளையும் தேவையில்லாதவகளையும் தவிர்ப்பது எப்படி என்று பார்க்கலாம்.

தீபாவளிப் பண்டிகைக்கு பர்சேஸ் செய்ய கடைவீதிகளுக்குச்  செல்லும்போது முதியவர்கள் போதுமாக தண்ணீர், மாத்திரைகள், மருத்துவ உடயோகப்பொருட்களை கையோடு ஒரு பேக்கில்  எடுத்துக்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு தேவையான டயாபர், பால்,  உணவுப் பொருட்களையும் எடுத்துக்கொண்டால் பாதுக்காப்பில்லாத பொருட்களை கொடுக்க வேண்டியதிருக்காது.
பெருமளவு காலையில் சீக்கிரமே சென்றால் கூட்ட நெரிசலைத் தவிர்க்கலாம்.

கடைகளில் முகவரி தொலைபேசி எண்கள் என்று கேட்டால் குடும்பத்தலைவரிம்ன் எண்களை மட்டும் கொடுக்கலாம்… இதனால் தேவையற்ற அழைப்புகள் தவிர்க்கப்படும்.
கையோடு குடை கொண்டு சென்றால் மழையிலும் வெயிலிலும் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.


திருட்டு பயம் அதிகமிருப்பதால் போலீஸார் கூறியுள்ள ஆலோசனைகளின்படி நடப்பது நல்லது. குழந்தைகளின் கையைப் பிடித்துக்கொண்டு போவது சிறப்பாகும்.