திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. நாடும் நடப்பும்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 20 டிசம்பர் 2022 (11:13 IST)

விரிவான புற்றுநோய் சிகிச்சை: கார்கினோஸ் ஹெல்த்கேருடன் இணைந்த சென்னை ஜெரி கேர் மருத்துவமனை!

கார்கினோஸ் ஹெல்த்கேர் மற்றும் ஜெரி கேர் மருத்துவமனை ஆகியவை தொற்றா நோய்கள் (என்.சி.டி) மற்றும் விரிவான புற்றுநோய் சிகிச்சைக்கு ஒரு கூரையின் கீழ் சிறந்த சமூக சேவை செய்திடும் வகையில் இணைந்து செயல்பட உள்ளன.


மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கார்கினோஸ் ஹெல்த்கேர், புற்றுநோய் சிகிச்சையில் நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு நோயாளிகளுக்கு சிறந்த சேவை வழங்கி வருகிறது. சென்னையை தலைமையிடமாகக் கொண்டு முதியோருக்கு தரமான மருத்துவ சிகிச்சை வழங்கும் ஜெரி கேர் மருத்துவமனை முற்றிலும் மூத்த குடிமக்கள், அருகில் உள்ள முதியோர் கிளினிக்குகளுக்கு வாழ்க்கை முறை சிகிச்சை வழங்குதல், நோயாளிகளுக்கு உதவுதல், முதியோர்களின் வீடுகளுக்கு சென்று தரமான சிகிச்சை வழங்குதல் ஆகிய சேவைகளை வழங்கி வருகிறது.

ஜெரிகேர் நிறுவனர் மற்றும் தலைமைச்செயல் அதிகாரி டாக்டர் லட்சுமிபதி ரமேஷ் கூறுகையில், எங்கள் மருத்துவனையில் அனைத்து வகை புற்றுநோய் சிகிச்சையைக் கண்டறிவதற்காக கார்கினோஸ் ஹெல்த்கேருடன் இணைந்து செயல்படுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். புற்றுநோய் சிகிச்சையில் தேவையான திறன், முழு திறன், நிபுணத்துவம் போன்றவைகளை கார்கினோஸ் ஹெல்த்கேர் பெற்றிருப்பதை அங்கீகரிக்கிறோம். குறிப்பாக அடுத்த தலைமுறை புற்றுநோய் பராமரிப்பு தீர்வுகள் மற்றும் மூலக்கூறு ஆய்வகங்கள் போன்ற பல்வேறு திறன்களை கார்கினோஸ் ஹெல்த்கேர் பெற்றுள்ளது என்றார்.

ஜெரிகேர் மருத்துவமனையின் முதியோர் புற்றுநோயியல் மருத்துவ சேவை பிரிவின் டாக்டர் ரெஜீவ் ராஜேந்திரநாத் MD DM DNB கூறுகையில், சமுதாயத்தில் எளிதில் நோய் பாதிப்புக்கு ஆளாகும் மூத்த குடிமக்களுக்கு, முன்கூட்டியே புற்றுநோய் தடுப்பு பரிசோதனை நடத்துவதன் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளோம். கார்கினோஸ் ஹெல்த்கேருடன் இணைந்து செயல்படுவதன் மூலம் உலகத்தரத்திலான புற்றுநோய் சிகிச்சையை குறைந்த செலவில் வழங்க முடியும். மேலும் அருகில் உள்ள ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கு மருத்துவ சேவையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் முன்கூட்டியே புற்றுநோயைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதால் தமிழக அளவில் குணமடைவோரின் விகிதம் மேம்படும். மேலும் தமிழ்நாடு சுகாதார துறையில் சிறந்த ஆரோக்கியம் கொண்ட மாநிலம் என்ற குறியீட்டை அடைய உதவும் என்றார்.

கார்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல்அதிகாரி ஆர்.வெங்கடரமணன் கூறியது:  நாட்டிலேயே முதலாவதாக மூத்த குடிமக்களை மையப்படுத்தி, முதியோர் சிகிச்சை மருத்துவமனை நடத்தி வரும் ஜெரிகேருடன் இணைந்து செயல்படுவது மகிழ்ச்சியளிக்கிறது. ஜெரிகேர் ஒரு முக்கிய கூட்டாளியாக விளங்கிறது. முதியோர் பராமரிப்பு சிகிச்சை மற்றும் நோயாளி பராமரிப்பில் அனுபவம் வாய்ந்த மருத்துவ நிபுணர்கள் மற்றும் புற்றுநோயியல் நிபுணர்கள் ஒன்றாக இணைந்து செயல்படும் வாய்ப்பை அளிக்கிறது. தொற்றா நோய்களுக்கு (NCD) சமுதாய சுகாதார முகாம்களை நடத்திட ஆதரவு தருவோம். நாட்டில் முன்கூட்டியே புற்றுநோயை கண்டறிதல் மற்றும் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவை கார்கினோஸ் ஹெல்த்கேரின் முக்கிய நோக்கமாகும். புற்றுநோயியல் சிகிச்சை சூழல் அமைப்பில் இந்த பிராந்தியத்திலும், அதற்கு அப்பாலும் நீண்ட காலத்துக்கு இணைந்து செயல்படும் நடவடிக்கையில் முதல்கட்ட முயற்சியாகும் என்றார்.

புதிய கூட்டு முயற்சியில் சென்னையில் பொதுவான புற்றுநோய் பரிசோதனைக்கான அடித்தளமாக விளங்கும். அதேபோல நோயாளிகளுக்கு இணையவழி மூலம் சிகிச்சைக்கான ஆலோசனை ஆதரவு, Virtual Tumor Board (VTB) ஆலோசனை சேவைகளையும், மரபணு வரிசைமுறை மற்றும் முன் கணிப்பு ஆய்வுகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச புற்றுநோயியல் நிபுணர்களுடன் ஆலோசனை பெறும் வாய்ப்பு கிடைக்கிறது. இதுபோன்ற புற்றுநோய் சிகிச்சைக்கு சேவை அளிப்பதில் கார்கினோஸ் ஹெல்த்கர் தனித்த இடத்தைப் பெறுகிறது. புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிதலில் புற்றுநோயாளிகளின் மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பரவலான புற்றுநோய் சிகிச்சை மைய அமைப்பைப் பெற்று கார்கினோஸ் நிறுவனம் முன்னோடியாகத் திகழ்கிறது.

கார்கினோஸ் நிறுவனம் பல்வேறு சுகாதார நிறுவனங்கள் மற்றும் புற்றுநோயியல் சூழல் அமைப்பில் உள்ள நிபுணத்துவம் பெற்றவர்களுடன் இணைந்து செயல்பட்சு வருகிறது. நவீன தொழில்நுட்பத்தின் மூலம் நோயாளிகளுக்கு சிகிச்சை சேவையை வழங்கி வருகிறது. கார்கினோஸ் ஏற்கனவே கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கான, மகாராஷ்டிரம், மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், டில்லி ஆகிய இடங்களில் சேவை வழங்கி வருகிறது. இப்போது தமிழகத்தில் கார்கினோஸ் சேவை வழங்கி வருகிறது.

இந்தியா முழுவதும் மருத்துவ செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. தேசிய புற்றுநோய் அமைப்பின் (National Cancer Grid) உறுப்பினராக உள்ளது. சுமார் 260-க்கும் அதிகமான புற்றுநோய் சிகிச்சை நிறுவனங்கள் என்.சி.ஜி. அமைப்பில் இடம்பெற்றுள்ளது. கார்கினோஸ் ஹெல்த்கேர் நிறுவனம் புற்றுநோய் குறித்த அடுத்த தலைமுறை ஆராய்ச்சியில் ஐ.ஐ.டி மும்பை, ஐ.ஐ.டி. கவுகாத்தி, கொச்சி பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (CUSAT) மற்றும் ஐ.ஐ.டி சென்னை ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுகிறது.