1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tn police given summon to arul vingesh mla

அருள் விக்னேஷுக்கு சம்மன்.. விரைவில் விசாரணையில் ஆஜர்..

arul vignesh
பெண் மாவட்ட கலெக்டருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் திருப்பூர் எஸ்.பி சிருஷ்டி சிங் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு விசாரணை சூடு பிடித்திருக்கிறது. திருப்பூர் மாவட்ட எஸ்பி சிருஷ்டி சிங் இன்று கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வந்தார். அதற்கு முன்பே விசாரணை அதிகாரி சிருஷ்டி சிங் முன்னிலையில் நேரில் ஆஜராகும் படி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது.

2 காவல்துறை அதிகாரிகள் இன்று காலை நேரில் சென்று தனது வீட்டிலிருந்த அருள் விக்னேஷிடம் சம்மனை அளித்தனர்.  எனவே விரைவில் அருள் விக்னேஷ் விசாரணையில் ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
இந்தியாவுக்கு மீண்டும் கூடுதல் வரிவிதிப்பா? டிரம்ப் அரசு மீண்டும் சேட்டை...