1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Modified: செவ்வாய், 18 ஜூன் 2019 (18:33 IST)

உலகக்கோப்பையில் உலக சாதனை: 17 சிக்ஸ் அடித்து சாதனை செய்த மோர்கன்!

உலகக்கோப்பையில் உலக சாதனை: 17 சிக்ஸ் அடித்து சாதனை செய்த மோர்கன்!
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இதுவரை ஒரே இன்னிங்சில் ஒரு பேட்ஸ்மேன் அதிகபட்சமாக 16 சிக்ஸர்கள் அடித்ததே உலக சாதனையாக இருந்தது. கிறிஸ்கெயில் வைத்திருந்த இந்த சாதனை இன்று தகர்க்கப்பட்டுள்ளது
 
இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் பேட்ஸ்மேன் மோர்கன் 17 சிக்ஸர்கள் அடித்து புதிய உலக சாதனை செய்துள்ளார். இவர் 71 பந்துகளில் 148 ரன்கள் அடித்துள்ளார். இதில் 17 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடங்கும்
 
உலகக்கோப்பையில் உலக சாதனை: 17 சிக்ஸ் அடித்து சாதனை செய்த மோர்கன்!
மேலும் இதே இன்னிங்சில் பெயர்ஸ்டோ 99 பந்துகளில் 90 ரன்களும், ரூட் 82 பந்துகளில் 88 ரன்களும் அடித்துள்ளனர். மொத்தத்தில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில்  6 விக்கெட்டுக்களை இழந்து 397 ரன்கள் எடுத்துள்ளது. கடைசி நான்கு ஓவர்களில் தான் நான்கு விக்கெட்டுக்கள் விழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆப்கானிஸ்தான் அணியின் ஜாட்ரான், குல்பதனின் நாயிப் தலா மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளனர். இந்த நிலையில் 398 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி இன்னும் சில நிமிடங்களில் ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது