புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : செவ்வாய், 18 ஜூன் 2019 (16:40 IST)

சினம் கொண்ட சிங்கமாய் இங்கிலாந்து அணி:வெல்லுமா ஆப்கானிஸ்தான்???

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான 24 ஆவது லீக் ஆட்டம் தொடங்கியது.

இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பேட்டிங் தேர்வு செய்து களமிறங்கி ஆடி வருகிறது.

இங்கிலாந்து அணி கடந்த 4 போட்டிகளில் 3 போட்டிகளை வென்று , புள்ளி விவரப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி கடந்த 4 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெல்லவில்லை என்ற நிலையில், தற்போது புள்ளிவிவரப் பட்டியலில் கடைசி இடமான 10 ஆவது இடத்தில் இருக்கிறது.

இங்கிலாந்து அணி மிகவும் பலவீனமான அணியுடன் மோதுவதால், இந்த போட்டி ஸ்வாரஸ்யமாக இருக்காது என பல கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கூறிவருகின்றனர்.

ஆனால் நாம் வியூகிப்பது தவறான ஒன்றாக கூட இருக்கலாம் என்றும், ஆட்டத்தின் நிலை எப்படி வேண்டுமென்றாலும் மாறும் என்றும் சில கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.

எதுவாகினும் வெல்லப்போவது இங்கிலாந்தா? ஆப்கானிஸ்தானா? என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.