ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. உலக கோப்பை கிரிக்கெட் 2019
Written By
Last Updated : சனி, 29 ஜூன் 2019 (18:32 IST)

நீல நிற ஜெர்சியே பெருமை: விராட் கோலி பெருமிதம்

நீல நிற ஜெர்சி அணிந்து விளையடுவதே பெருமையாக கருதுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

இங்கிலாந்தில் நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்குபெரும் அணிகள், ஒரே நிற ஜெர்சி கொண்ட அணிகளுக்கு எதிரான போட்டியில், மாற்று ஜெர்சி அணிந்து பங்கேற்று வருகின்றன.

இந்நிலையில் வரும் 30 ஆம் தேதி, இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆரஞ்சு நிற ஜெர்சி அணிந்து பங்கேற்க இருக்கிறது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, ’நீலம் தான் நமது வண்ணம் என்றும், நீல வண்ண ஜெர்சியை அணியும்போது பெருமையாக கருதுவதாகவும் கூறினார்.

மேலும் அவர், ஒரு போட்டியில் மட்டுமே புதிய ஜெர்சியில் நன்றாக இருக்கும் என்றும், இந்த ஜெர்சியே தொடரும் என்றும் நினைக்கவில்லை என கூறியுள்ளார்.

2019 ஆம் ஆண்டிற்கான உலகக் கோப்பையை நடத்தும் நாடு என்னும் அடிப்படையில், ஜெர்சி மாற்றத்தில் இங்கிலாந்துக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.